தொடக்கவுரை
தமிழ்மொழி இன்று இணையத்தின் மூலம் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கிறது என்றால் அது மிகையல்ல. கணினியில் வளர்ச்சியானது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பேருதவி செய்வதோடு காலத்திற்குத் தக்கவாறு தமிழ் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு இணையம் பல வடிவங்களில் உதவி புரிகின்றது எனலாம். அவ்வகையில் கூகுள் இணைய தேடு தளத்தில் வழியே உருவாக்கப்பட்ட கூகுள் கடையில் (Play Store) கிடைக்கும் தமிழ் மொழி, இலக்கியம் தொடர்பான குறுஞ்செயலிகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
குறுஞ்செயலிகளும் தமிழும்
இணையத்தின் தேடுபொறிகளில் மிக முக்கியமானது கூகுள் பொறியாகும். இதில் அனைத்து வகையான தகவல்களையும் பெற முடியும். “கடந்த 2012 மார்ச் முதல் கூகிள் நிறுவனம் தனது ஆன்டிராய்டு அங்காடியையும் இசைச் சேவையையும் இணைத்து கூகிள் பிளே என்ற இணையக் கடையைத் தொடங்கியது.”1 இக்கடையின் மூலம் கிடைக்கும் தமிழ் குறுஞ்செயலிகள் பலவிதங்களில் தமிழ் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அவ்வகையில் தமிழ்க் குறுஞ்செயலிகள் கீழ்க்கண்டவாறு.
தமிழ் எழுத்துரு
தமிழ் இலக்கியம்
இக்கால இலக்கியம்
மருத்துவம்
குழந்தை பாடல்கள்
சமையல்
பக்தி
செய்தி
அகராதி
என்று வகைப்படுத்திக்கொண்டே செல்லலாம். இவற்றின் மூலம் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்று விளங்குகிறது. இக்குறுஞ்செயலிகளை தங்களளின் கைக் கணினிகளில் நிறுவுவதன் மூலம் அந்தத் தலைப்பு தொடர்பான தகவல்களைப் பெற முடிகிறது.
தமிழ் எழுத்துரு குறுஞ்செயலிகள்
தமிழில் தட்டச்சு செய்யக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டனவாக இவை விளங்குகின்றன. மேலும், இவற்றில் எழுத்துருக்ளுடன் மென்பொருள்களும் உள்ளன.
பொன்மடல், முரசு அஞ்சல், பிரமுகி, தமிழ் விசை, எழுத்தாணி, த ஜெஸ்ட் தமிழ், பாணினி, இண்டிக், தமிழ் ஒருங்குறி விசைப்பலகை, தமிழ் புள்ளியியல் விசைப்பலகை, டைப் தமிழ், சுவரச்சக்ரா இந்திய மொழி மாற்றி, போன்றனவற்றைக் குறிப்பிடலாம். விசைப்பலகை மட்டுமல்லாமல் இதில் சில இலக்கண விதிப்படி இயங்கும் மென்பொருள்களாகவும் உள்ளன. இவற்றின் மூலம் எழுத்துருக்களை தட்டச்சு செய்தி வெளியிட முடிகிறது.
இலக்கியக் குறுஞ்செயலிகள்
இலக்கியத்தைக் கற்பிக்கும்படியான தொல்காப்பியம், ஆத்திச்சூடி, மூதுரை, நல்ல தமிழ் அறிவோம், தமிழ் கற்க - 1, வாழ்க தமிழ், இந்தமிழ், திருக்குறள் தமிழ் ஆங்கிலம், தமிழ் கற்போம், திருக்குறள் பொருளுரை, தமிழ் பழமொழிகள், போன்று இலக்கியம் தொடர்புடைய குறுஞ்செயலிகளின் அதிகம் கிடைக்கின்றன இவற்றின் மூலம் தமிழ் இணையத்தில் மட்டுமல்லாமல் கைகணினிகளினால் எல்லா இடங்களிலும் பரவி வருகிறது.
இக்கால இலக்கியங்கள்
இக்கால இலக்கியங்களைத் தரும் குறுஞ்செயலிகளாக, பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் பாடல்கள், கண்ணதாசன் பாடல்கள், சுந்தரராமசாமி கதைகள், பொய்மான் கரடு, பார்த்திபன் கனவு, அலைஓசை, தியாகபூமி, மகுடபதி, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், சோலைமலை இளவரசி, மோகினி தீவு போன்ற கல்கியின் நாவல்கள், கல்கி சிறுகதைகள், புதுமைப்பித்தன் கதைகள், அசோகமித்திரன் சிறுகதைகள், ஜெயகாந்தன் சிறுகதைகள், மு.வ.சிறுகதைகள், தி.ஜானகிராமன் கதைகள், சுஜாதா சிறுகதைகள், அண்ணாதுரை கதைகள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், நகைச்சுவை, 100 சிறந்த கதைகள், தண்ணீர் தேசம், பட்டுக்கோட்டைப் பாடல்கள், தமிழ்ப் பாடல்கள், தமிழ் காமிக்ஸ் போன்றன நவீன கால இலக்கியங்களைப் பற்றிய தெளிவும் தமிழ்ப் புதினங்களைப் பற்றிய விளக்கங்களும் கிடைக்க வழிவகுக்கிறது. மேலும், பெரியார், காமராசர் வாழ்க்கை வரலாறு பற்றிய குறுஞ்செயலிகளினால் அவர்களைப் பற்றிய உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
மருத்துவம்
வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான கை வைத்தியம் பற்றியும் தமிழ் மருத்துவம், சித்த மருத்துவம் பற்றியதுமான செயலிகளின் மூலம் மருத்துவரையே வீட்டிற்கு அழைத்து வருவதைக் காண முடிகிறது.
குழந்தைப் பாடல்கள்
ஒவ்வொரு ஆண்ட்ராய்டு பேசிகளிலும் கைக்கணினிகளிலும் இருக்க வேண்டிய பாடல்களாக குழந்தைப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்குறுஞ்செயலிகளில், மழலைப் பாடல்கள், பாப்பாப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், மழலையின் மகத்துவம் போன்ற வகைகளில் உள்ளன.
சமையல்
உணவகத்தினை வீட்டிற்கே கொண்டு வரும் விதமாக பல வகைகளில் சமையல் குறிப்புகள் அடங்கிய செயலிகள் கூகுள் கடையில் அதிகம் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் புதுப்புது சமையல் வகைகளான, தமிழ்நாடு இனிப்பு வகைகள், குழம்பு வகைகள், சட்னி வகைகள், சூப் வகைகள், அசைவ உணவுகள், தமிழ்நாடு பிரியாணி வகைகள், செட்டிநாடு சமையல், தமிழ்நாடு சிற்றுண்டி வகைகள், தமிழ்நாடு நொறுக்கு தீனிகள், தமிழ்நாடு ரசம் வகைகள் போன்றன கிடைக்கின்றன.
பக்தி
ஆன்மீகம் தொடர்பான பல செயலிகள் இக்கடையில் கிடைக்கின்றன. கந்தசஷ்டிகவசம், சைவ மகிமை, தெட்சிணாமூர்த்தி அஸ்டகம், சரஸ்வதி பாடல்கள், விஷ்ணு சகஸ்ரநாமம், வேதாகமம், பஜகோவிந்தம், கஜேந்திர மோட்சம், திருக்குராஆன் போன்ற குறுஞ்செயலிகளின் மூலம் இவற்றை பாடலாகக் கேட்கும்படியும் இவை உள்ளன.
செய்திகள்
இச்செயலிகள், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என பல வடிவங்களின் கிடைக்கின்றன. தமிழ் செய்தித்தாள்கள், இலங்கைத் தமிழ் செய்தித்தாள்கள், தமிழ் செய்திகள், நியூஸ் மற்றம் இதழ்கள், புதுத்தமிழ் ரெடியோ, ஆஸ்திரேலியன் தமிழ் ரேடியோ, உதயன் தமிழ் செய்திகள் போன்றவை தமிழகச் செய்திகள், இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள் என்ற விதத்தில் கிடைக்கின்றன. செய்தித் தாள்களைத் திரட்டித் தரக்கூடிய செயலிகளும் இணையத்தில் உள்ளன.
அகராதி
தமிழில் விளக்கங்களைத் தரக்கூடிய தமிழ் சிறந்த அகராதி, ஆங்கிலம் தமிழ் அகராதி, சூப்பர் விக்கிபீடியா போன்ற அகராதிகள் பல இணைய கடையில் கிடைக்கின்றன.
குறுஞ்செயலிகளின் மூலம் தமிழ் வளர்ச்சி
இணையம், மின்னஞ்சல் அனுப்புவதற்கான நிலை மாறி தற்போது ஆண்ட்ராய்டு கைக்கணினிகளினால் தமிழில் இலக்கியம் தொடர்பான குறுஞ்செயலிகள் பல பெருகியுள்ளன. இவற்றின் மூலம் இணையத்தமிழின் புதிய வகையாக இக்குறுஞ்செயலிகள் உருபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜைக் கணினி மூலம் இணைய வசதி பெற இயலாதவர்களுக்கு இக்கையடக்க கணினி அதிக வாய்ப்பை அளிக்கிறது. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாக தமிழ் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
தொகுப்புரை
இணையதளத்தின் மூலமாக தகவல்கள் பரிமாற, குறுஞ்செய்திகள் படிக்க, சமூக வலைதளங்களைப் பயன்படுத்த என்ற நிலையிலிருந்து தமிழிலக்கியம் தொடர்பான குறுஞ்செயலிகள் உருவாக்கத்திற்குப் பிறகு இலக்கிய வளர்ச்சி இணையத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதுடன் புதிய பரிணாமத்தைப் பெற்று வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சான்றெண் விளக்கம்
1.12 வது உலகத்தமிழ் இணைய மாநாட்டு இதழ் – 2013, ப.339
2. நன்றி, கூகுள் இணைய கடை (பிளே ஸ்டோர்), பா.நாள். 21.09.2015
உறுதிமொழி
கைக்கணினியும் ஆண்ட்ராய்டு தமிழ் குறுஞ்செயலிகளும் என்னும் தலைப்பிலான இக்கட்டுரை என் சொந்த முயற்சியால் உருவானது என்றும்
இப்பதிவு, “வலைப்பதிவர் திருவிழா – 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015” க்காகவே எழுதப்பட்டது என்றும்
இதற்கு முன் வெளியான படைப்பல்ல முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்.

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியில் கணித்தமிழ் குறுஞ்செயலிகளின் பங்கு மகத்தானது. தேடலும் தெளிவும் நன்று.. போட்டியில் வெற்றிபெற் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteநல்ல கட்டுரை வாழ்த்துகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான கட்டூரை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா...
ReplyDeleteகுறுஞ்செயலிகளைத் தொகுத்து அவற்றின் பயனோடு இணையத் தமிழ் பற்றி எழுதியக் கட்டுரை அருமை.. வாழ்த்துகள்
ReplyDelete